கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் 12 புதிய வகுப்பறைகள் திறப்பு

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட 12 வகுப்பறை கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்தார்.

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் சட்டமன்ற தொகுதியின் நிதியின் கீழ் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 வகுப்பு அறைகள் கட்டப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பைசா கூட வீணடிக்காமல் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே