காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு லடாக் ஜம்மு காஷ்மீர் என இரு மாநில யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த நடவடிக்கைகளால் வதந்திகள் பரவி வன்முறைகள் வெடிப்பதை தடுக்கும் நோக்கில் ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை தினம் என்பதால் காஷ்மீரில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பள்ளத்தாக்கு பகுதிகளை தவிர்த்து ஏனைய இடங்களில் சாலையில் இருந்த போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும் காஷ்மீரில் 27-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே