காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதுடன் அணை பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தமிழக உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கருத்தரங்கில் கலந்துகொண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசும்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுவதாகவும், இந்த திட்டத்தை கைவிட்டு டெல்டா பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே