காமராஜரின் நினைவிடைத்தில் துணை முதல் அமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை

கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில்  துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பள்ளிக்குழந்தைகளுக்கு முதன்முதலில் மதிய உணவு அளித்து, கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று போற்றப்படும் மறைந்த காமராஜர், தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த போது பல முக்கிய நீர்ப்பாசன திட்டங்களையும், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளையும் கொண்டுவந்தார்.

அவரது 45 ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காந்தியின் லட்சிய பாதையில் வாழ்ந்த காமராஜர், அவரது பிறந்த தினத்திலேயே மறைந்ததை சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே