திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இரு வீட்டார் எதிர்ப்பு காரணமாக காதல் ஜோடி மலைமீது இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுப்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பெண்ணும், ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளனர். இதற்க்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து அங்குள்ள மலைமீது ஏறி உள்ளனர்.
அவர்களை காப்பாற்றும் நோக்கில் உறவினர்கள் பின்தொடர்ந்து வரவே, இருவரும் மலைமீது இருந்து குதித்தனர். இந்த காட்சியை கீழே இருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
நல்வாய்ப்பாக இருவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.