காதலிக்காக செலவழித்த பணத்தை திருப்பி வாங்கித்தரக் கூறி காவல் நிலையத்தில் ரகளை

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

சென்னை மதுரவாயலில் காதலித்த பெண் ஏமாற்றியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த காதலன் தனது காதலிக்கு செலவழித்த தொகையை திரும்பப் பெற்றுத் தருமாறு கூறி ரகளையில் ஈடுபட்டார்.
நடிகர் தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நாயகி ஸ்ரீதேவி நடிகர் தனுஷ் முதலில் காதலிப்பார் அவர் டீ விற்கும் நபர் என்று தெரிந்தவுடன் காதலை ஏற்க மறுத்து விடுவார் இதனால் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையம் சென்று ரகளையில் ஈடுபடுவது போல அமைத்து இருக்கும் காட்சி போன்று சென்னை மதுரைவயலில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரவாயல் மேட்டுக்குப்பம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் விக்கி மெக்கானிக்கான இவர் நேற்று இரவு மதுரைவயல் போலீஸ் நிலையத்திற்கு போதையில் வந்தார் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண் இதுவரை தன்னை காதலித்து விட்டு தற்போது காதலிக்கவில்லை என்றும் கூறி புலம்பினார், மேலும் காதலிக்காக செலவழித்த 3 ஆயிரம் ரூபாயை திரும்ப பெற்று தருமாறும் போலீசாரிடம் வலியறுத்தினார். குடிபோதையில் அந்த இளைஞர் உளறுவதாக நினைத்த போலீசார் அவரை கண்டு கொள்ளவில்லை இதனையடுத்து அவர் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்து கொண்டார், ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலைய வாயிலில் நின்று தனது காதலி மீதான கோபத்தை கொட்டி தீர்த்த அந்த இளைஞர் பின்னர் சாலையில் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் அப்போது அவரை அழைத்த போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர் எனினும் அதனை ஏற்காத விக்கி காதலி வீட்டிற்கு சென்று நியாயம் கேட்கிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பிட்டு சென்றார் .. அவரது காதல் ரகலையால் மதுரவாயல் காவல் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே