கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் : இன்று வெளியிடுகிறது சுவிஸ் அரசு

சுவிற்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை அளிக்கும் விதமாக இன்று தொடங்குவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ள அறிக்கையில் மத்திய வருவாய்துறை செயலாளர் A. P. பாண்டே, நேரடி வரிகள் வாரிய தலைவர் P. C. மோடி, உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ஆகியோருடன் சுவிற்சர்லாந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுவிற்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை அளிக்கும் திட்டம் இன்றுமுதல் தொடங்குவதாகவும், 2018-ஆம் ஆண்டில் உள்ள கணக்கு விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018-இல் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு இருந்தாலும், அந்த தகவலும் கிடைக்கும் என்றும் இது கருப்பு பணம் மற்றும் சுவிஸ் வங்கி ரகசியம் ஆகியவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே