வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் இருப்பதற்கு கரை வேட்டி கட்டியவர்களே காரணம் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கரை வேட்டி கட்டியவர்களால்தான் தமிழகம் கரை படிந்து உள்ளதாக நடிகர் கமலஹாசன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என கூறினார்.
கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக வெளியாகி உள்ள தமிழ் மண்ணின் தொன்மையை பாரதத்தின் தொன்மையன கூறும் தமிழக அரசுக்கு, இந்த தேர்தலில் தமிழர்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் கனிமொழி தெரிவித்தார்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் இருக்கிறது என்றால், அதற்கு திமுகவும், கரை வேட்டி கட்டிய கருணாநிதியுமே காரணம் என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.