கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.1.5 கோடி தங்க நகைகள் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம் கரூர் வைஸ்யா வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மாயமான வழக்கில் வங்கி மேலாளர், உதவி மேலாளர் உட்பட 7 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்டுகள் கணக்கில் வராமல் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ் மற்றும் ஜெவெல் லோன் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்கள் பொறுப்பாளர் சந்தான ஹரி விக்னேஷ், லாவண்யா, தேன்மொழி, இசைவானி, கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் காவல் முடிந்ததையடுத்து நேற்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விக்னேஷ் பாபு, அவர்கள் அனைவருக்கும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே