கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள சுபஸ்ரீ

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்து இறந்த சுபஸ்ரீ எழுதியிருந்த ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ கடந்த 12ஆம் தேதி ஸ்கூட்டரில் செல்லும்போது பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் கனடாவில் உயர் கல்வி பயில்வதற்காக சுபஸ்ரீ எழுதியிருந்த ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கனடா செல்லும் கனவோடு தேர்வு எழுதி, அதில் கிடைத்த வெற்றியை கேட்டு மகிழ தற்போது சுபஸ்ரீ உயிரோடு இல்லை என்பது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே