மொகரம் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் இமான் உசேன் நினைவாக கத்தி போடுதல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 11ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டதில் கத்தி போடுதல் நிகழ்வு நடைபெற்றது. துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கத்தி மற்றும் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு உடலில் கீறி ரத்தம் சொட்ட சொட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதும் அப்படி ஒரு பண்டிகையே இல்லை என்று கூறி வருவது குறிப்படத்தக்கது .