கணவர் விவசாயம் செய்வது பிடிக்காமல் மனைவி தற்கொலை.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பொறியாளரான தனது கணவர் விவசாயம் செய்தது பிடிக்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கட்டிட பொறியாளரான பெரிய மாடசாமி மற்றும் ஸ்டெல்லா மேரி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பொறியியல் தொடர்பான வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாததாலும் சொந்த விவசாய நிலம் இருந்ததாலும் பெரிய மாடசாமி விவசாயம் செய்து வந்துள்ளார்.

இது பிடிக்காமல் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி, அரசு வேலைக்கு அல்லது வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு பெரிய மாடசாமியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கணவர் வெளியில் சென்ற நேரத்தில் மனைவி ஸ்டெல்லா மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சேத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே