நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா ? – நடிகர் சிவக்குமார்

கடவுள் மற்றும் மதம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளி மாநிலத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்குள்ள தர்காவுக்குச் சென்ற வீடியோ வெளியானதையடுத்து அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது,  அந்தப் படம் திப்பு சுல்தான் தொடர்புடைய கதையைக் கொண்டது என்ற தகவலை அடுத்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுவது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் வரத் தொடங்கியதையடுத்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிவக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே