ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுதிட்டத்தால் பொது விநியோகத் திட்டம் பாதிக்காது

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டம் பாதிக்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் புதிய பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 99 லட்சம் குடும்ப அட்டைகள் மின்னணு அட்டைகளாக மாற்றப்பட்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும அமைச்சர் காமராஜ் உறுதியளித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே