ஏர் இந்தியா விமானத்தில் காந்தியின் உருவப்படம் வரைந்து மரியாதை

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானம் ஒன்றில் காந்தியின் உருவப்படத்தை வரைந்துள்ளது.

தேச தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

அகிம்சை வழியாக நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய காந்தியின் பெருமையை உலக தலைவர்கள் போற்றியிருந்த நிலையில், இன்று பிறந்தநாள் காணும் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏ320 என்ற விமானத்தின் பின் பகுதியில் காந்தியின் உருவப்படத்தை வரைந்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானம் உலக நாட்டு பயணிகளின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே