எய்ட்ஸ் இருப்பதை ஒப்புக் கொண்ட பிரபல விளையாட்டு வீரர்

ரக்பி விளையாட்டில் புகழ்பெற்ற கேரத் தாமஸ் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ரக்பி விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமையாகக் கருதப்படுபவர் கேரத் தாமஸ். வேல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாகக் கூறும் அவர், பல ஆண்டுகளாக தான் இருட்டான மனதுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னால் இந்த ரகசிய வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ள அவர்,மனஅழுத்தத்துடன் இருந்ததால் தற்கொலைக்கு கூட முயன்றதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த மனநிலையில் இருந்து மீண்டு வந்த அவரின் சிறப்பு ஆவணப்படம் வரும் 18ம் தேதி பிபிசி 1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே