தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் புதியதாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிப்பதாக குற்றசாட்டு இருந்துவரும் நிலையில், தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #என்_வேலை_என்_உரிமை என்று தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி உள்ளார்கள். இந்த ஹேஷ்டேக்கின் நோக்கம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுதான். அந்த ஹேஷ்டேக்கை தற்போது இந்திய அளவில் தமிழர்கள் டிரென்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக பல மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.