எந்தெந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரம்

எந்தெந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

  • வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உலர்ந்த புளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதியின் தினசரி வாடகை ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை உள்ள ஓட்டல் மற்றும் விடுதி அறைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
  • 7500 ரூபாய்க்கு மேல் வாடகை உள்ள ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  
  • இலைத்தழைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் தயாரிக்கப்படும் கப்புகள், தட்டுகளுக்கான ஜிஎஸ்டி, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
  • 10 முதல் 13 பேர் பயணிக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு, 1 சதவீதமாகவும்,
  • டீசல் வாகனங்களுக்கான செஸ் வரிக்கான இழப்பீடு 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.  
  • இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்துப்  போட்டிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளுக்களும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், நெசவு மற்றும் நெசவு அல்லாத பாலிதீன் பைகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே