உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் பங்கஜ் அத்வானி சாம்பியன்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி வெற்றிபெற்றுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த இவர், கடந்த 2003 ஆண்டு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் பட்டங்களை குவித்து வருகிறார். இந்நிலையில், மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் இறுதிப் போட்டியில் மியான்மர் வீரர் நேத்வே ஊ- வை அவர் எளிதில் வீழ்த்தினார்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்கஜ், 6-2 என்ற ஸ்கோரில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 

ஒவ்வொரு முறையும் போட்டிகளில் பங்கேற்கும் போது, வெற்றி என்ற இலக்கைக் கொண்டே விளையாடி வருவதாகவும், அதன் சாட்சியாகவே வெற்றி கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

22வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பங்கஜ் அத்வானிக்கு, பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரது சாதனைகளைக் கண்டு நாடு பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே