உலகத் தடகளப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனைக்கு தங்கம்

உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முன்னணி வீராங்கனையான ஃபிரேசர் பிரைஸ் 10.71 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளில் 4 முறை 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பிரேசர் பிரைஸ் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் பிரிட்டன் வீராங்கனை ஆஷர் ஸ்மித் வெள்ளிப் பதக்கத்தையும், ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோஸ் டாலவ் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே