உதகையில் இன்று தொடங்கியது மலர் கண்காட்சி

உதகையில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

உதகையில் முதல் பருவ காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சியை காண முடியாதவர்களின் வசதிக்காக இரண்டாம் பருவ காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.

இதை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொள்வதற்காகவே 3 ஆயிரம் மலர்களை கொண்டு ரெண்டு செல்ப்பி ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்ணாடி மாளிகை முன்பு 5 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர். இன்று தொடங்கி ஒரு மாத காலம் இந்த மலர் கண்காட்சி நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே