நாடு முழுவதும் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாககவும், 187 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்படவில்லை எனவும் பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, வாங்கிய தொகை ஆகியவற்றை பட்டியலாக எஸ்பிஐ ஆணையத்தில் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் அனைத்தும் பென் டிரைவ் வடிவில் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன.