ஈரோட்டில் கலைஞர் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பள்ளிப் படிப்பு தொடங்கி, அரசியல், ஆட்சி வரை அவரது வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் படிப்படியாக கருணாநிதியின் சிலைகள் திறக்கப்படும் என்றார்.

மொழியை காப்பதற்காக உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர் கருணாநிதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ் மொழிக்காக எல்லா நிலைகளிலும் போராட்டம் நடத்தியவர் கருணாநிதி என்றும் கூறினார்.

ஜெயலலிதா மூலம் பதவி சுகம் அடைந்தவர்கள், அவருக்காக ஒரு இரங்கல் கூட்டம்கூட நடத்தி இருக்கிறார்களா?? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிலை திறப்பைத் தொடர்ந்து சாலையோர பழ வியாபாரிகளுக்கு கட்சியின் சார்பில் இலவசமாக குடைகளை வழங்கிய ஸ்டாலின், திமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் போட்டி தேர்வுக்கான நூலகத்தை பார்வையிட்டு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களையும் வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே