இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்- கவிஞர் வைரமுத்து

இருமொழிக் கொள்கையில் தமிழர்கள் தொடர்ந்து உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் குறித்து வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்று நேற்று ஒலிக்கப்பட்ட கருத்தில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி மொழி பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது என தெரிவித்தார்.

சூரியன்கூட ஒட்டுமொத்த பூமிக்கும் ஒரே பகலை கொண்டுவந்து இணைக்க முடியவில்லை எனும்போது இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விடமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இருமொழிக் கொள்கை என்பதுதான் பேரறிஞர் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுத்த அழியாத ஜீவ கொள்கை எனக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே