இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தற்காலிக ஓய்வு – தோனி

இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தற்காலிக விருப்ப ஓய்வில் உள்ள மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து இரண்டு மாதக்காலம் ஓய்வு பெற்று இந்திய துணை ராணுவத்தில் தான் பணியாற்றச் செல்வதாக பிசிசிஐயிடம் கடந்த ஜூலை மாதம் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ இதற்கு அனுமதி வழங்கியதையடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்கவில்லை.

இதனிடையே தோனி பெற்றிருந்த 2 மாத அனுமதிக் காலமானது தற்போது நிறைவுபெற்றுள்ளது.

இந்தநிலையில், தனது தற்காலிக விருப்ப ஓய்வை மேலும் இரு மாதங்களுக்கு அதாவது, நவம்பர் மாதம் வரைக்கும் தோனி நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே