இந்திய அளவில் தாது மணல் ஏற்றுமதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் முதலிடம்.!

இந்திய அளவில் தாதுமணல் ஏற்றுமதியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் முதல் இடம் பிடித்ததிற்காக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் விருது வழங்கி கௌரவித்தார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறையின் கீழ் உள்ள ரசாயனம் மற்றும் சார்பு பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் மூலம் சிறந்த ஏற்றுமதியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 2015-2016 மற்றும் 2016-17 நிதி ஆண்டுகளில் தாது மணலை அதிகளவில் ஏற்றுமதி செய்து இதற்கான விருதை விவி மினரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியனுக்கு மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விருது வழங்கி கௌரவித்தார்.

இதேபோல தாதுமணல் ஏற்றுமதியில் சர்டிபிகேட் ஆப் மெரிட் சான்றிதழை சகோதர நிறுவனமான டிரான்ஸ்பர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் வி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்தியாவிலேயே தாதுமணல் ஏற்றுமதியில் தமிழகத்தைச் சேர்ந்த விவி மினரல்ஸ் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருந்து, நாட்டிற்கே பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே