இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதேவியின் மெழுகு உருவ சிலை..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ரஜினி மற்றும் கமலோடு இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளவர்.

கடந்த ஆண்டு துபாயில் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அவரது முழு உருவ மெழுகு சிலையை மிக தத்துரூபமாக வடித்து இருக்கிறது.

ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள் ஜான்வி கபூர் மெழுகு சிலை அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே