இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

இங்கிலாந்தில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 2 ஆம் தேதி நியூயார்க் சென்றடையும் முதலமைச்சர் பழனிசாமி, அங்கு அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் கலந்துரையாட இருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து சான்ஹுசெ சென்று, அங்குள்ள அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்க உள்ளார். 

தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் முதலமைச்சருடனான பயணத்தில் இணைவதற்காக சனிக்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே