தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நாகராஜன் அவர்கள் நமது தலைமை செய்தியாளர் முகம்மது சிக்கந்தர் க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;
‘தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒரு சிறந்த தலைவர், தமிழக பாஜக வை நன்றாக வழிநடத்தினார் மேலும் கடந்த இரண்டு முறையாக அவருக்கு வழங்கப்பட்ட மாநில தலைவர் பொறுப்பை அவர் திறம்பட உழைத்தார், இனிமேல் அவர் மேல் பொறுப்புக்கு போக வேண்டுமென்றால் அகில பாரத அளவில் செல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் இது போன்று மாநிலத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு செல்ல வேண்டும் , அந்த வகையில் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் தெலுங்கானா ஆளுநர் பொறுப்புக்கு முழு தகுதி வாய்ந்தவர்’. இவ்வாறு அவர் கூறினார்.
- மொரட்டு சிங்கிள்களுக்கு காதல் ரயில்!
- தமிழகத்தின் தாஜ்மஹால் – மனைவிக்கு கோவில் கட்டிய கணவர்