ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு கையால் எழுதப்பட்ட நீண்ட குரான் நூல்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், கார்டூனிஸ்ட் ஒருவர், கையால் நீண்ட பக்கத்துக்கு குரான் நூல் முழுவதையும் எழுதி உலக கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திருவனந்தபுரம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த திலீப் என்பவர், ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு கையால் எழுதிய நீண்ட குரானை தயாரித்துள்ளார்.

இதனை கின்னஸ் சாதனை முயற்சிக்காக அவர் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது அந்த குரான் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை ஆர்வமுடன் கண்டுகளித்த மக்கள், புனித நூல் குரானில் இடம்பெற்றுள்ள வாசகங்களை கையில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதுவரை எகிப்து நாட்டை சேர்ந்த முகமது கானி என்பவர் 600 மீட்டர் நீளத்துக்கு கையால் எழுதிய குரான் நூலே, உலக கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது.

திலீப் இதற்கு முன், கடந்த 2016ம் ஆண்டு 16.89 மீட்டர் நீளத்துக்கு பேட்மிட்டன் ராக்கெட்டை உருவாக்கி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே