ஆன்லைனில் திரைப்படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க முடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளியில் மஞ்சா வர்மக்கலை பயிற்சி பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 17ஆம் ஆண்டு விழா மற்றும் வர்ம பிராத்திகாரா சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைன் திரைப்பட டிக்கெட் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50 பைசா என்று இருந்த பராமரிப்புச் செலவை 4 ரூபாயாக அரசு உயர்த்தி கொடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று கூறியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே