ஆசிரியை ஆடை ஆபத்து..! அதிர்ச்சியில் கல்லூரி

நாமக்கல் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், உடன் வேலை பார்க்கும் பேராசிரியையை காதலிப்பதாக நடித்து வாட்ஸ் ஆப் வீடியோ காலில் ஆபாசமாக படம் பிடித்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.  

வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் ஆண் நண்பர்கள் செய்ய சொல்லும் சேட்டைகளை செய்தால் அது இணையம் வழியாக பரவி உங்கள் அந்தரங்கம் அம்பலமாகிவிடும் என்று எச்சரித்து காவல்துறை எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

இதனை கண்டுகொள்ளாமல் காதலில் மயங்கி கிடக்கும் சில பெண்கள் தங்கள் காதலனுடன் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் எல்லைமீறி பேசிவருகின்றனர்…!

அந்த வகையில் நாமக்கல் தனியார் கல்லூரியில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் ஒருவர், அதே கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியை ஒருவரை காதலித்துள்ளார்.

இருவரும் அவரவர் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசிக் கொள்வது வழக்கம். அப்படி பேசிக் கொண்டிருந்த காதலன் விரும்பியதால், பேராசிரியை ஆடையின்றி காட்சி கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த வில்லங்க பேராசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

அதனை தன்னுடன் நெருங்கி பழகும் மாணவன் ஒருவனிடம் காண்பித்துள்ளார். அவன் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்த பேராசிரியையை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளான்.

பேராசிரியர் போல நெருங்கி பழகிய விவகார மாணவனும், ஆசிரியையை ஆடையின்றி போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் இதுதொடர்பான புகார் காவல்துறைக்கு சென்றுள்ளது.

வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட பேராசிரியர் மற்றும் மாணவனை பிடித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்கள் தங்கள் அந்தரங்கத்தை வாட்ஸ் அப் வீடியோ காலில் அம்பலப்படுத்தினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த விபரீத சம்பவம்..!.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே