கோவையில் இயங்கிவரும் ஆக்சென்ட் அகாடமி எனும் நீட் தேர்வு பயிற்சி மையம், முறையான பயிற்சி வழங்காமல் தங்களை ஏமாற்றி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆக்செண்ட் அகாடமி என்ற நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டுவரும் நிலையில், சுமார் 20 பேர் இங்கு பயிற்சி பெற்றுவருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பயிற்சி மையத்தில் முறையாக பயிற்சி வழங்காமல் மோசடி செய்யப்படுவதாக மாணாக்கர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவர்கள், ஆட்சியரிடம் தங்களது புகாரை மனுவாகவும் அளித்தனர்.