ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் இறங்கி 98 ஆயிரத்து 202 கோடி ரூபாயாக உள்ளது.
மத்திய புள்ளி விவர துறையின் தகவலில் இது தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி 17 ஆயிரத்து 733 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 24 ஆயிரத்து 239 கோடி ரூபாயும் வசூல் ஆனது.
மாநிலங்களில் இடையிலான ஜிஎஸ்டி வசூல் 48 ஆயிரத்து 958 கோடி ரூபாயாக இருந்தது. டெஸ் வரியாக 7272 கோடி ரூபாய் வசூலானது. மொத்தமாக 75 லட்சத்து 80 ஆயிரம் ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.