கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அரசுப் பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அதிகாலை 4 மணியளவில் பேருந்து சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த சரக்கு லாரியின் டயர் வெடித்ததில் லாரி நிலை தடுமாறி தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளது.
இதில் அரசுப் பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரியின் முன்புறங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளரான புதுச்சேரி முருகம்பாக்கத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சரக்கு வாகன ஓட்டுநர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த இளவரசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். சாய்பாபா என்ற உதவியாளர் சரக்கு வாகனத்தில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்து காரணமாக, திருவண்ணாமலை சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
உறுப்பினர், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர், செஞ்சி வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.