அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் தீட்டம் எதுவும் இல்லை

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371 ஐ நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பேசிய அவர்,  பாஜகவின்  தலையாய கொள்கையான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு மட்டுமே நீக்கப்படும் என கூறி வந்திருந்தோம்  என்று தெரிவித்தார்.

எனவே வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்சட்டப்பிரிவு 371 இன்றும் இருக்கும், நாளையும் இருக்கும், என்றும் இருக்கும் என அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே