அதிகப்படியான தள்ளுபடிகளை நிறுத்தக்கோரி உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக சங்கம் கடிதம்

உணவுகளில் வழங்கப்படும் அதிகப்படியான தள்ளுபடிகளை நிறுத்தக்கோரி உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தேசிய உணவக சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது.

ZOMATO , SWIGGY , FOODPANDA , UBER ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான தள்ளுபடிகள் தருவதால் உணவக நிறுவனங்களுக்கு கமிஷன் பிரச்சனை, அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகளை பண்டிகை காலங்கள் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே