சில மணி நேரங்களுக்கு முன்பு ட்விட்டரில் நடிகர் விஜய்க்கு எதிராக ட்ரெண்டான #FakeBOFraudVIJAY என்ற ஹேஸ்டேக் போல் தற்போது நடிகர் அஜித்துக்கு எதிராகவும் #ViswasamFakeBOExposed என்ற ஹேஸ்டேக் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறி அந்தத் திரைப்படத்திற்கு பொய்யான விளம்பரம் செய்ததாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில் அதுதொடர்பாக டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு எதிராக #FakeBOFraudVIJAY என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. இதை அஜித் ரசிகர்கள் தான் செய்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டியுருந்த நிலையில், #ViswasamFakeBOExposed என்ற ஹேஸ்டேக் நடிகர் அஜித்துக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் தான் செய்கிறார்கள் என்று தற்போது அஜித் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களாக உள்ள இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் இந்த மோதல் சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.