ஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் வெவ்வேறு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்தவாறு உள்ளன.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான ஜைடஸ் கெடிலா தங்களது கொரோனா தடுப்பூசி மருந்து ‘ஜைகோவ்-டி’ யின் இரண்டாம் கட்ட பரிசோதனையை நாளை (ஆக., 6) துவங்க உள்ளது.

கடந்த 15ம் தேதி துவங்கிய முதற்கட்ட பரிசோதனையில் இதுவரை நல்ல பலன் கிடைத்துள்ளதையடுத்து இரண்டாம் கட்ட பரிசோதனை துவங்கப்பட உள்ளது. 

வீரியம் குறைந்த மருந்தின் மூலம் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் மனிதர்களிடையே மற்றும் விலங்குகளிடையே எதிர்ப்பு சக்தி உருவானதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட பரிசோதனையின் போது பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டாளர் வி.ஜி.சோமானி அனுமதி வழங்கியுள்ளார்.

இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக சமூக ஆர்வலர்கள் பதிவு சமீபத்தில் முடிந்ததையடுத்து நாளை ஆக.6ம் தேதி முதல் இரண்டாம் கட்ட பரிசோதனை துவங்குகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே