கணவனை திருப்திப்படுத்துவது எப்படி ??

மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உறவைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் அங்கே காதலும், குடும்பமும்,அதைச் சார்ந்த எதுவும் இருப்பதில்லை,

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இன்பமும் இருப்பதில்லை. மனித இனத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு குணம், மிகவும் பழமையான உள்ளனுணர்வு பாலுணர்வு மட்டுமே.

பாலுணர்வை பகிர்ந்துகொள்வதற்காக சமுதாயம் ஆணையும், பெண்ணையும் திருமணம் என்ற பந்தத்தில் மூலம் இணைக்கிறது.

இந்த  பந்தம் சமுதாயத்தின் அனைத்து கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவும், சுற்றுப்புறத்தை சார்ந்ததாகவும், சம்ரதாயங்களைப் பொறுத்ததாகவும் அமைகின்றன.

டீன் ஏஜ் பருவத்திற்குள் நுழைந்து பாலுணர்வைப் பெற்றுவிட்ட ஆண் -பெண் இருவருமே உடனடியாக துணையைத் தேடி தனிமையில் இருப்பதில்லை.

சமூகத்திற்காக பயந்து நடக்க வேண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் பேசி திருமணம் என்ற அங்கீகாரத்தை தாங்களாகவே, பெரியவர்கள் மூலமாகவே பெற்றுக்கொண்டு, அதன் பிறகே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டி இருக்கிறது.

அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். இந்த அந்தரங்க உறவை அனுபவிப்பதற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலுறுப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.அதற்கு மனம் முதன்மையான காரணம்.

இதையும் தாண்டி சமூகப் பொறுப்புகள் இருக்கும். கடமைகள்,கட்டுப்பாடுகள் இருக்கும். ஏனென்றால், விலங்குகளைப் போல விருப்பப்பட்டவுடன் உறவு கொண்டுவிட்டு, முடிந்தவுடன் பிரிந்து போய்விடுவதில்லை மனிதபந்தம்.

அது காலம் காலமாகத் தொடருகிற ஆயிரம் காலத்துப் பயிர்.

விலங்குகள் உச்ச இன்பத்தைப் பற்றி சிந்தித்துப் பார்பதில்லை. உடலுறவு திருப்தியாக இருந்ததா இல்லையா என்பதை பற்றி கவலைப்படுவது கிடையாது.

ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை.ஆண் -பெண் இருவருமே ஒருமித்த இன்பத்தை அனுபவிப்பதில் அக்கறை உள்ளவராக இருக்கிறார்கள்.

கணவனைத் திருப்தி படுத்துவதில் மனைவியும், மனைவியைத் திருப்திப்படுத்துவதில் கணவனும் அக்கறை செலுத்துகிறார்கள், செத்துத்தவேண்டும்.

சமூகத்தில் ஆண் என்பவன் இன்பத்தை அனுப்பிப்பவன் போலவும், பெண் அதைத் தரக்கூடியவள் போலவும் சித்தரிக்கப் படுகிறார்கள். இருவருக்கும் இன்பம் என்ற குறிக்கோள் இல்லாமல் போய்விடும் நிலையில் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி சமூகம் சிந்திப்பதில்லை.

நமது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதில் ஒருவரை ஒருவர் எத்தைகைய ஈடுபாட்டுடன் ஈர்க்கமுடியுமோ அத்தகைய ஈடுபாடுகளைக் கட்டி நடந்து கொள்கிறார்கள்.

இத்தனைக்கும் அவர்களுக்குள் அது அவருக்குப் பிடிக்குமோ-அவளுக்கு பிடிக்காதோ என்ற பயத்துடனே காலத்தைக்  கடத்துவார்கள். இதனால் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை வளர்ந்த பிறகு, தனது பழைய இயல்புக்குத் திரும்புவார்கள்.

தனக்கு பிடித்ததை கணவனும், மனைவியும் கேட்க ஆரம்பிப்பார்கள் அல்லது அவற்றை நாடுவார்கள். இது எதிர்மறையான விளைவுகளை உண்டாகிவிடக்கூடும். கணவன் மனைவிக்கு மறைமுகத் தடைகளை உண்டாக்குவதும், மனைவி கணவனுக்கு மறைமுக ஒத்துழைப்புத்தர மறுப்பதும்கூட நடக்கும்.

இதைப்போலவே, திருமணம் முடிந்த கையோடு நாளொன்றுக்கு நாலைந்து முறை மனைவியைத் தேடிய கணவன் அதன் பிறகு ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு தினம் ஒரு முறை பிறகு வாரத்திற்கு இரண்டு முறை, பிறகு மாதத்திற்கு இரண்டு முறை என்று பின்வாங்கிப் போய்விடுவதெல்லாம் சமூகத்தில் அவனுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் காரணமாக!

பணம் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை பராமரிக்கவேண்டும், சமூகத்தில் மேலான அந்தஸ்து உள்ளவனாக இருக்கவேண்டும் என்ற சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்காக தனது இன்பத்தை அவன் பலியிட வேண்டியிருக்கிறது.

இதை புரிந்துகொண்ட கணவனைத் தயார்படுத்தும் பொறுப்பு நல்ல மனைவியிடம் இருக்கவேண்டும்.

திருமணம் என்பது ஓப்பந்தமல்ல, பிடித்தல் வாழலாம், இல்லாவிட்டால் பிரியலாம் என்பதற்கு! அது இரண்டு மனங்களை இறப்பு வரை இணைந்திருக்கும் பந்தம்.

இந்த பந்தத்தை யார் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதில்தான் போட்டியிருக்கவேண்டும். இதை சிதைப்பது யார் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இயல்பாக உள்ள கூச்சம் மற்றும் அச்சத்தின் காரணமாக உறவுக்கு கணவன்தான் அழைக்கவேண்டும் என மனைவி எதிர்பார்பதுண்டு. தான் அழைத்ததால் தன்னைப் பற்றி தவறாக எண்ணிவிடுவானோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்யும்.

இந்த அச்சத்தையும், கூச்சத்தையும் போக்குவதற்கு ஆரம்பத்திலிருந்தே கணவனிடம் மனம் விட்டு பேசவேண்டும். சில சங்கேத பாஷைகளைப் பேசி உறவு வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

கணவனை திருப்திப்படுத்த கூடுமானவரை அவனை ஆசைகளை முதலில் அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது புத்திசாலித்தனம் மட்டும் அல்ல, இன்ப வாழ்வை-இல்லற இன்பத்தை இறக்கும் வரை தொடரும் வழியுமாகும்.

வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் மனைவியின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க கணவன், சோர்ந்து போகாமல் எழுந்து நிற்பான்.

அதைப் போலவே வாழ்க்கையில் பல குறைபாடுகள் இருந்தாலும் முழுமையான இன்பம் கணவனிடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் அதற்காகவே வாழும் பெண்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள்.

தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். இதில் விரிசல் விழுந்தால் கணவன் -மனைவி உறவிலும், வாழ்விலும் விரிசல் கண்டிப்பாக விழும்.

வீட்டுக்குள் உறவினர்கள் வந்துவிட்டாலோ, பகல் பொழுது வந்துவிட்டாலோ சில பெண்கள் தங்கள் கணவர்களைப் பக்கத்திலேயே சேர்க்கமாட்டார்கள். இது தவறானது. 

கணவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை தருவதற்கு எதையும் தடையாகக் கருத வேண்டியது இல்லை.  இயல்பாக நடந்துகொள்ள வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே கணவனைத் தொட்டுத் தொட்டுப் பேசுவது, பேசும்போது கைகளைப் பிடிப்பது, கன்னத்தைத் தடவுவது, முத்தம் கொடுப்பது, வருடிக் கொடுப்பது என்று எந்த நேரத்திலும் தொட்டுத் தடவி உங்கள் அன்பை எப்போதும் வெளிப்படுத்தப் தயாராக இருக்கவேண்டும்.

களைத்து வீடு திரும்பும் கணவன் முன் கலகலப்பாக சிரித்துக்கொண்டும், தலை சீவி அலங்கரித்துக் கொண்டும் நின்றால், அவள் புத்துணர்ச்சியோடு சிலிர்த்துக் கொள்வான். 

அந்தக் களைப்பிலும் உங்களுடைய முத்த ஒத்தடங்கள் தான் எத்தகைய உற்சாக பானத்தையும் விட அதிகமாக புத்துணர்ச்சியை அளிக்கும்.

இப்படி இருந்துவிட்டால் எத்தகைய குடும்பப் பிரச்சனைகளும், வேறுவித தொல்லைகளும் உங்கள் இருவருக்குள் நுழையாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே