கொரோனாவின் 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

கொரோனா 3-வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் இன்று கூறியது,

கரோனா மூன்றாம் அலை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே