சென்னையில் போக்குவரத்து காவலரை மிரட்டிய பெண்..!! (VIDEO)

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் சேத்துப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர், அப்பகுதியில் இ-பதிவு இல்லாமல் வாகனம் ஒன்று வந்துள்ளது. காரை இடைமறித்த காவல் துறையினர் இ-பதிவு குறித்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது, இ-பதிவு இல்லாமல் கார் இயக்கி வந்தது உறுதியான நிலையில், காவல் துறையினர் வாகனத்தை இயக்கி வந்த பெண்மணிக்கு அபராதம் விதித்தியுள்ளனர். அந்த பெண்மணி, தனது வழக்கறிஞர் தாயாருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பெண்ணின் தாயார், நான் ஒரு வழக்கறிஞர்., உன்னை பணியில் இருந்து நீக்கம் செய்ய வழக்கு தொடுப்பேன், நீ யார்? காரை சோதனை செய்ய? எதற்காக காரின் கண்ணாடியை கீழிறக்கி பேச சொல்லியிருக்கிறாய்?. பெண் காரில் வந்தால் கண்ணாடியை இறக்கி பேச சொல்வாயா? போடா என்று பரபரப்பாக வாக்குவாதம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே