கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்..!!

கரோனா நிவாரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது நிவாரணம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநரிடம் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலர் இறையன்பு ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் கரோனா நிவாரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். மேலும் தனது ஒரு மாத ஊதியத்தையும் கரோனா நிதியாக அவர் வழங்கினார். அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே