யார் யாரெல்லாம் அவசர பயணம் மேற்கொள்ளலாம்? – காவல் ஆணையர் விளக்கம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து.

இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருந்து கடை, உணவகங்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும். 

சென்னையில் இருந்து வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்கள் செல்ல திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 3 காரணங்களுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: