அனுஷ்கா ஷெட்டியை முத்தமிடும் அந்த இருவர் யார்? வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டியை ஒரே நேரத்தில் இருவர் முத்தமிடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .

சுந்தர் சி இயக்கிய ’ரெண்டு’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான அனுஷ்கா அதன்பின் விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’, சூர்யா நடித்த ’சிங்கம்’ சிம்பு நடித்த வானம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவரை உலக அளவில் பிரபலம் ஆக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவருடைய இரண்டு சகோதரர்கள் அவருக்கு அன்புடன் முத்தம் கொடுத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அனுஷ்காவின் ஒரு சகோதரர் அரசியல் கட்சி ஒன்றில் இருப்பதாகவும், இன்னொரு சகோதரர் காஸ்மெட்டிக் சர்ஜனாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே