ரத்தத்தில் நச்சை நீக்கி சர்க்கரையை குறைக்கும் சிறியாநங்கை, எங்கு கிடைக்கும், எப்படி பயன்படுத்தணும்?

கசப்புத்தன்மை கொண்ட மூலிகைகள் எப்போதுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டவை. இவை எல்லாமே விஷக்கடிகளுக்கும், தீரா நோய்க்கான நீரிழிவுக்கு எதிரி என்றும் சொல்லலாம். அவற்றில் ஒன்று சிறியா நங்கை.
ரத்தத்தில் நச்சை நீக்கி சர்க்கரையை குறைக்கும் சிறியாநங்கை, எங்கு கிடைக்கும், எப்படி பயன்படுத்தணும்?
ஹைலைட்ஸ்:
*ஒரு மண்டலம் அளவுக்கு இதை குடித்தால் உடலில் விஷத்தை எதிர்க்கும் தன்மை ஊறியிருக்கும்
*இன்சுலின் போடுவதும் படிப்படியாக குறையும் அளவுக்கு இன்சுலின் சுரப்பும் உண்டாகும்.
சிறியா நங்கை கடுமையான கசப்புத்தன்மை கொண்டிருக்கும் இதை தொட்டாலே நீண்ட நேரம் கசப்புதன்மை உள்ளங்கையில் இருக்கும். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் அதில் கசப்புதன்மை ஏறியிருக்கும் அவ்வளவு கசப்புதன்மை கொண்ட மூலிகை இது. இதன் கசப்புதன்மைக்கு காரணம் இலைகளில் பீட்டா சட்டோஸ்டீரால் ,கால்மேகின் என்னும் பொருளும், வேர்களில் ஆண்டி ரோகிராப்பின் என்னும் கசப்பு பொருளும் இருப்பதால் தான். சிறியா நங்கை மிள்காய் நங்கை, குருந்து என்றும் கிராமங்களில் அழைக்கப்படுகிறது.

சிறியா நங்கையையைப் போன்று பெரியா நங்கை, வசியா நங்கை, வெண்ணங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்கநங்கை, கருநங்கை என்று பல மூலிகைகள் உண்டு. இதில் சிறியா நங்கையும், பெரியா நங்கையும் தான் மருந்து பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

சிறியாநங்கை செடியை இப்போது பெருமளவு பார்க்கமுடிவதில்லை. செம்மண், கரிசல் மண் பகுதியில் நன்றாக வளரும் இது குறுஞ்செடியாக இருக்கும். வெட்டு இல்லாத எதிர் இலைகளை கொண்டிருக்கும். எங்கேனும் இதிலிருக்கும் பூவை கண்டால் பூ எள் போன்று வெண்மையாக இருக்கும். இந்த பூவில் இருந்து வரும் காய்கள் வெடிக்கும் போது விதைகள் கீழே விழும். இதை எடுத்து வந்து விதைத்து ஒரு மண்டலம் ஆவதற்கு இரண்டு நாட்கள் முன்பு நாற்று நட்டு வளர்க்கலாம். பிறகு பூ வருவதற்கு முன்பே இலையை மட்டும் பறித்து நிழலில் 7 நாட்கள் வரை உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளலாம். 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலும் இந்த பொடியை பயன்படுத்தலாம்.
சிறியா நங்கையின் இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவையே. சிறியா நங்கையை கண்டால் சீறிய நாகம் கட்டழியும் என்பது பழமொழி. பாம்பு, தேள் போன்ற விஷக்கடி ஜந்துக்கள் கடித்துவிட்டால் இந்த இலையை மைய அரைத்து சாப்பிட சொல்வார்கள்.

விஷம் உடலில் ஏறும் போது நாக்கின் சுவை தெரியாது. அப்போது இந்த இலையை விழுங்கினாலும் இதன் மிகுதியான கசப்பு சிறு துளியும் தெரியாது. இதை சிறிய புளியங்கொட்டை அளவு உருட்டி உருட்டி கொடுத்து கசப்பு தெரியும் வரை விழுங்க சொல்வார்கள். ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை முற்றிலும் குறைத்துவிடும் வல்லமை இந்த மூலிகை செடியான சிறியா நங்கைக்கு உண்டு.ரத்தத்தை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பானின் சிறந்த மூலிகை இது என்று சொல்லலாம்.

கிராமங்களில் பாம்பு, விஷப்பூச்சி நடமாடும் இடங்களில் வசிப்பவர்கள் வயல் ஓரங்களில் சிறியா நங்கை செடியை வளர்ப்பார்கள். சிறியா நங்கையி மருத்துவ குணங்களை முழுமையாக அறிந்த முன்னோர்கள் சிறியா நங்கை பொடியை செய்து தினமும் காலையும் மாலையும் வெறும் வயிற்றில் கால்டீஸ்பூன் அளவு எடுத்து குடித்து வருவார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் அளவுக்கு இதை குடித்து வந்தால் உடலில் விஷத்தை எதிர்க்கும் தன்மை பெருமளவு ஊறியிருக்கும். பிறகு விஷக்கடிகள் கடித்தாலும் அவை பெருமளவு பாதிப்பை உண்டாக்காது.

சிறியா நங்கை இப்போது கிடைப்பதில் மிக சிரமம் என்றாலும் கிடைத்தால் விடாதீர்கள். 5 இலையை பறித்து அரைத்து புளியங்கொட்டை அளவு எடுத்து பாலில் கலந்து குடித்துவிடுங்கள். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் அவ்வளவு கசப்பை விழுங்குவது சாதாரணமானதல்ல. ஆனால் அப்படி கொடுத்தால் உடல் அதிசயத்தக்க பலம் பெறும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கு என்று இன்சுலினையும், மாத்திரையும் கலந்து எடுத்துகொள்பவர்களுக்கும் இவை அருமருந்து தான். காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ அல்லது வெறூம் வயிற்றில் அதிகாலையில் இதன் ஒரு இலையை மென்று விழுங்க வேண்டும். கசப்பு மருந்து சிரமம் கொடுத்தாலும் பலன் மிகுதியாக இருக்கும். அதோடு இன்சுலின் போடுவதும் படிப்படியாக குறையும் அளவுக்கு இன்சுலின் சுரப்பும் உண்டாகும்.
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர மாத்திரைகளோடு இந்த இயற்கை முறையையும் பின்பற்றலாம். சிறியா நங்கை பொடியோடு நாவல் கொட்டை பொடி, வெந்தயப்பொடி, சிறு குறிஞ்சான் இலைப்பொடி அனைத்தையும் சம அளவு கலந்து வைத்துகொள்ளவும். தினமும் காலை ஒரு வேளை மட்டும் கால் தம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அளவு கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் கழித்து சர்க்கரை பரிசோதனனை செய்து முன்பு இருந்த அளவோடு ஒப்பிட வேண்டும். கணிசமாக குறைந்திருப்பதை அறியலாம். இரண்டு வேளையும் இந்த பொடி சாப்பிடலாம். ஆனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக குறைந்தால் கண்டறிவது சிரமமாக இருக்கும். அதிக அளவு சர்க்கரை 400 க்கு மேல் இருந்தால் இரண்டு வேளை இந்த பொடி சாப்பிடலாம். அப்படியே பரிசோதனையும் தவறாமல் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் குறைவான சர்க்கரை வேறு பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும்.

மண்ணீரல் சம்பந்தமான நோய்களுக்கும், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகளுக்கும் இவை மருந்தாக செயல்படுகிறது. எனினும் இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு தான் இந்த மூலிகை பொடியை எடுத்துகொள்ள வேண்டும். எல்லாம் சரி செடி கிடைத்தால் கண்டிப்பாக வீட்டில் வளருங்கள். தற்போது சிறியாநங்கை செடியை பார்ப்பதே அரிதாக இருக்கிறது என்பதால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிறியா நங்கை பொடியை வாங்கி பயன்படுத்தலா.ம். நிச்சயம் பலன் இருக்கும் பாதிப்பு இருக்காது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே