பக்ரீத் பண்டிகை எப்போது?? தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதாக தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த மாதத்தில் தங்கள் வேண்டுதலுக்காக இஸ்லாமியர்கள் ஆட்டை வெட்டி குர்பானி கொடுப்பது வழக்கம்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் அதிகமாக ஆடுகள் வெட்டப்படும் என்பதால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

அன்றைய தினம் இஸ்லாமியர்கள் கூட்டாகவோ, தனியாகவே ஆடுகளை அறுத்து இறைச்சியை உறவினர்கள், ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும் கொரோனா பாதிப்பு குறையாததாலும் பக்ரீத் பண்டிகை எப்படி கொண்டாடப்படவுள்ளது என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே