ரஷ்யா செல்வதற்கு முன் முப்படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங் பேசியது என்ன ??

இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீவிரமடைந்து சமீபத்தில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் உயிர்சேதம் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2-ஆம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு மந்திரி ரஷியா நாட்டில் மாஸ்கோவில் நடைபெறும் மாபெரும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ரஷ்யாவிற்கு செல்லும் முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், இராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் விமானபடைத் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த எல்லை சிக்கலில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீறி சீனா பதற்றத்தை அதிகரித்தால் தகுந்த வழியில் பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே