குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்? கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

குழந்தைகள் நடக்க தொடங்கிய நாளை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். நான்கு அடி சேர்ந்தாற் போன்று எடுத்து வைப்பதற்குள் நான்கு முறை விழுந்திருப்பார்கள். அப்படி விழும் ஒவ்வொரு முறையும் தலையில் தான் அடிபடவே செய்யும். இது சாதாரணமானது என்றாலும் வெளிப்புற காயங்கள் தெரியும் அளவுக்கு உள் புற ஊமை காயங்கள் அறியப்படுவதில்லை. இதை எப்படி கண்டறிவது? இது குறித்து தெரிந்துகொள்வோம்.
குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்? கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
ஹைலைட்ஸ்:
குழந்தைகள் கட்டில், நாற்காலி, மேசை பொருள்களை பிடித்து நிற்கும் போது, நடைவண்டியில் நடக்கும் போது
மூளையில் அதிர்ச்சி, மூளையில் பாதிப்பு, மூளையில் ரத்தகசிவு போன்று தீவிரமாகும் போது தான் வெளிப்படும்.
பேறுகாலத்தை காட்டிலும் பிறந்த குழந்தையின் ஒருவயது காலம் கூடுதலாக கவனிக்க வேண்டிய காலம். அதிலும் இரண்டாம் ஆறுமாத காலங்களில் தான் குழந்தை உட்காருவதும் முட்டி போட்டு தவழ்வதும் எழுந்து நிற்பதும், அடியெடுத்துவைப்பதும் வழக்கம்.

குழந்தை அழகாக உட்கார ஆரம்பிக்கும்போதே திடீரென்று கீழே விழத்தொடங்கும். அப்படி விழும்போது உடலில் அதிகமாக அடிபடக்கூடிய இடம் என்றால் அது குழந்தையின் தலைப்பகுதி தான். அதிலும் முன்புறம் சாய்ந்து விழும்போது பெரும்பாலும் தலைக்கு பாதிப்பு நேராது ஆனால் பெரும்பாலும் பின்புறமாகவே விழத்தொடங்குவதால் குழந்தையின் தலை அடிபடவாய்ப்பும் அதிகரிக்கிறது.

சைக்கிள் ஓட்டும் போது விழுந்து எழுந்து தான் கற்றுகொள்ள முடியும் என்று சொல்வார்கள். அதே போன்று தான் குழந்தை நடக்க பழகும் போது விழுந்து எழுந்து தான் நடைபயில்வார்கள். எல்லா குழந்தைகளும் கீழே விழுவதும் தலையில் அடிபடுவதும் கூட சாதரணமானது. ஆனால் ஏன் கீழே விழும்போதெல்லாம் தலையில் மட்டுமே அடிபடுகிறது என்று கேட்கலாம்.
பிறந்த குழந்தையின் தலை நடுக்கத்தோடு இருக்கும். தலை நிற்கும் வரை குழந்தையை தூக்கும் போது தலையோடு கழுத்தும் சேர்ந்தாற்போன்று அணைத்து தூக்க வேண்டும். ஆறாவது மாதத்தில் குழந்தையின் தலை ஓரளவு நின்றிருக்கும். பிறகு குழந்தை எழுந்து நிற்கும் போதும் நடக்க தொடங்கும் போதும் தலைப்பகுதியின் எடையை உடல் பேலன்ஸ் செய்ய வேண்டியிருக்கும். குழந்தை போதுமான ஆரோக்கியம் இல்லாத போது இந்த எடையை தாங்கு கூடிய வலுவில்லாமல் கீழே விழுவார்கள். இதுவும் வளர வளர சரியாகிவிடும்.
பொதுவாக குழந்தைகள் கட்டில், நாற்காலி, மேசை பொருள்களை பிடித்து நிற்கும் போது, நடைவண்டியில் நடக்கும் போது கீழே விழுந்துவிடுவார்கள். தரை வழுவழுவென்று இருந்தால் வேகமாக ஓடி வரும் போது வழுக்கி விழுந்துவிடுவார்கள். கட்டில் அல்லது தூளியில் தூங்கி எழும்போது அருகில் யாரும் இல்லாத நிலையில் கீழே இறங்க தெரியாமல் விழுவதும் உண்டு. சற்று உயரமான சோபாவில் ஏற தொடங்கி அல்லது சிறிய நாற்காலி சிறிய மனை போன்றவற்றில் ஏற தொடங்கி கீழே விழுந்துவிடுவதும் அதிகம் உண்டு.

இன்னும் சில குழந்தைகள் நடக்கும் போது கீழே இருக்கும் பொருள்கள் தவறியும் விழுந்துவிடுவதுண்டு. இவை எல்லாமே சாதாரணமானது ஆனால் குழந்தையின் தலையில் அதிகமான காயமோ, வீக்கமோ உண்டானால் அதை அலட்சியப்படுத்தகூடாது. குறிப்பாக சற்று உயரமான பகுதியில் இருந்து குழந்தை கீழே விழுந்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

குழந்தையின் மூக்கு, காது. வாயில் நீர் போன்ற திரவம் வெளியேறினால் தாமதிக்காமல் குழந்தைக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். இவை மூளை தண்டுவடத்தை பாதுகாக்கும் திரவமாகவும் இருக்கலாம். இவற்றில் பாதிப்பு உண்டானால் குழந்தைக்கு கண் பார்வை, செவித்திறன் குறைபாடு உண்டாகலாம். தலையில் முடியை ஒதுக்கி மண்டை ஓடு வெளியில் தெரிகிறதா, குழந்தையின் தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
சில குழந்தைகள் அழும் போது மூச்சுவிட நேரமில்லாதவாறு அழத் தொடங்கும். குறைந்தது 10 முதல் 20 விநாடிகளாவது மூச்சை நிறுத்திவைக்கும். இதனால் பதறிவிடுவோம். ஆனால் வேகமான அழுகையால் மூச்சை நிறுத்தி மெதுவாக அல்லது வேகமாக மூச்சு விடத்தொடங்கும். வெகு சில நிமிடங்களில் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கும். மேற்கண்ட அறிகுறிகள் எல்லாமே கூர்மையாக கவனிக்க வேண்டியது. ஏனெனில் குழந்தையின் காயம் பெரிதாக இருந்தால் நிச்சயம் நாம் மருத்துவரை நாடுவோம். ஆனால் காயம் இல்லாத நிலையில் இந்த அறிகுறிகளையும் கவனிப்பது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
ஏனெனில் கண்ணுக்கு தெரியாத காயம் சமயத்தில் மூளையில் அதிர்ச்சி, மூளையில் பாதிப்பு, மூளையில் ரத்தகசிவு போன்று தீவிரமாகும் போது தான் வெளிப்படும் என்பதால் குழந்தை விழும் போது எச்சரிக்கையாக கவனிப்பது நல்லது.

குழந்தையின் தலையில் அடிபட்டாலும் குழந்தை கீழே விழுந்த இரண்டு நாட்கள் வரை குழந்தையின் நடவடிக்கை, உறக்கம், அவர்களின் இயல்பான நடவடிக்கை அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது ஒரு வயது குழந்தைக்கானதல்ல, வளரும் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே