கொரோனாவால், கடந்த வாரம் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து ’ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம்’ என்று நடிகை காயத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையை சார்ந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தவாரம் உயிரிழந்தார்.
அவரது உடலை இடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய முற்பட்டபோது, பொதுமக்கள் மயானத்தில் போராட்டத்தில ஈடுபட்டனர்.
இந்நிகழ்விற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பலரது உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இது தான் என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம் என்றும் கடினமான சூழலில் மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இச்சூழலில் இவ்வாறு நிகழும் சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்றும், மேலும் இத்தருணத்தில் மருத்துவர்களும் வீட்டிலே பாதுகாப்பாக இருந்தால் என்ன நிகழும் என்று சற்று சிந்தித்து பாருங்கள் என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.